ஜனாதிபதி ட்ரம்பல்ல... இந்த நாட்டின் மத்தியஸ்தத்திற்கு உடன்பட்ட தாய்லாந்து - கம்போடியா
தாய்லாந்தும் கம்போடியாவும் தங்கள் எல்லைப் பிரச்சினையில் மலேசியா மத்தியஸ்தராகச் செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வருகை
பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதன் பின்னரும் பிரச்சனைக்குள்ளான பகுதியில் தாக்குதல் முன்னெடுப்பதாக இரு நாடுகளும் மற்றவர் மீது பழி போட்டு வருகின்றன.
இந்த நிலையில், கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டும், தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய்யும் திங்கட்கிழமை மாலை மலேசியாவில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய வெளிவிவகார அமைச்சர் மொஹமத் ஹசன், பெர்னாமா என்ற செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு மலேசியா மீது முழு நம்பிக்கை உள்ளது, அத்துடன், தன்னை மத்தியஸ்தராக இருக்கச் சொன்னார்கள் என்றும் அமைச்சர் மொஹமத் கூறியுள்ளார்.
இதனையடுத்து தமது கம்போடிய மற்றும் தாய்லாந்து சகாக்களுடன் இந்த விவகாரம் தொடர்பில் பேசியதாகவும், இந்த பிரச்சினையில் வேறு எந்த நாடும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் மொஹமத் தெரிவித்துள்ளார்.
பிராந்திய ASEAN மன்றத்தின் தலைவரான மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெள்ளிக்கிழமை போர்நிறுத்தத்தை முன்மொழிந்ததைத் தொடர்ந்து மலேசியாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
கோரிக்கையை ஏற்று
ஆனால் தமது கோரிக்கையை ஏற்று தாய்லாந்து மற்றும் கம்போடியா பிரதமர்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்திலும் அவர் தலையிட்டதாக ட்ரம்ப் கூறும் கருத்தை இந்தியா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை, அதேவேளை மறுக்கவும் இல்லை.
ஒரு தசாப்தத்திற்கு பிறகு தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையே மிக மோசமான சண்டை வெடித்த நான்கு நாட்களில், இறப்பு எண்ணிக்கை 30 ஐத் தாண்டியது. இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலிருந்து 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |