தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சீமான் கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீமான் கைது
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து சீமான் கூறுகையில், "அறவழியில் போராட கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை" என்றார்.
இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை பொலிஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, தற்போது வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |