போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் சீன் வில்லியம்ஸ் போதைப்பழக்கத்தில் சிக்கியுள்ளதாக கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன் வில்லியம்ஸ்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சீன் வில்லியம்ஸ் (Sean Williams), ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத்திற்கான ஆப்பிரிக்க தகுதிச்சுற்று 2025யில் இருந்து விலகியிருந்தார். 
இந்த நிலையில், சீன் வில்லியம்ஸ் (39) தானாக முன்வந்து போதைப்பொருள் பழக்கத்தால் மறுவாழ்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
அவர் ஊக்கமருந்து எதிர்ப்பு சோதனைக்கு இடையே தன்னை விடுவித்துக் கொண்டார். பின்னர் ஒரு உள் விசாரணையின்போது அவர் போதைப் பழக்கத்தால் போராடி வருவதாக தெரிவித்தார்.
சாத்தியமில்லை
இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .
அதில், கவனமாக பரிசீலித்த பிறகு சீன் வில்லியம்ஸ் எதிர்கால தேர்வுக்கு போட்டியிட மாட்டார் என்றும், டிசம்பர் 31ஆம் திகதி அன்று காலாவதியான பிறகு அவரது தேசிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சாத்தியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |