அப்பாவி சிறுமியை துடிதுடிக்க கொன்ற சித்தி! தட்டித் தூக்கிய போலிஸ்
சென்னையில் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை 2வது மனைவி துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் ஓராண்டுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை ராணிப்பேட்டை சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், ராணுவ வீரர்.
இவரது முதல் மனைவி சுமதி, கடந்த 2016ம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்தது, குழந்தை பிறந்த சில மாதங்களில் சுமதி உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில் ராதிகா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார் சந்திரசேகர்.
ராதிகா, சுமதியின் மகளை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது, இந்நிலையில் சம்பவதினத்தன்று அதாவது கடந்தாண்டு குழந்தையை தலையணை கொண்டு அமுக்கியுள்ளார்.
இதில் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது, தன் மேல் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக குழந்தை மயக்கமடைந்து விட்டது எனக்கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர், இந்நிலையில் தற்போது வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலிசார் நடத்திய விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் ராதிகா.
இதற்கு சந்திரசேகரும் துணைபோனது தெரியவந்துள்ளது, இதையடுத்து இருவரையும் கைது செய்த போலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.