ரகசிய காதலியிலிருந்து ராணி: மீண்டும் மாறவிருக்கும் ராணி கமீலாவின் பட்டம்
மன்னர் சார்லசுடைய மனைவியான கமீலா, முதலில் இளவரசர் சார்லசுடைய ரகசிய காதலி என அழைக்கப்பட்டார். பின்பு, மகாராணியாரின் கோரிக்கையின்பேரில் மன்னரின் மனைவியாகிய ராணி என அழைக்கப்பட்டார்.
மன்னரின் முடிசூட்டுவிழாவுக்குப் பின் அவர் ராணி என அழைக்கப்படுகிறார்.
இப்படி பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட கமீலாவின் பட்டம், மீண்டும் ஒருமுறை மாற இருக்கிறதாம்.
Image: BUCKINGHAM PALACE/AFP via Getty
ராணி கமீலா
இளவரசர் சார்லஸ் தன் மனைவி டயானாவுடன் வாழும்போதே அவருடன் பழகி, அது வெளி உலகுக்குத் தெரியவந்ததால், சார்லசுடைய ரகசிய காதலி என ஊடகங்களால் அழைக்கப்பட்டார் கமீலா.
இப்போது மன்னராகியுள்ள சார்லசின் மனைவியாக இருப்பதால், அவர் ராணி கமீலா என அழைக்கப்படுகிறார். ரகசிய காதலி என்ற நிலையிலிருந்து, ராணி என்ற நிலையை எட்டுவதற்கு அவர் தாண்டி வந்த படிக்கற்களும் தடைக்கற்களும் ஏராளம்.
Image: PA
மீண்டும் மாறவிருக்கும் பட்டம்
மேற்கத்திய நாடுகளைப் பொருத்தவரை, அவர்கள் இப்போதே எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டமிடுகிறார்கள்.
மகாராணியார் உயிருடன் இருந்தபோதே, அவர் இறந்தால் என்ன செய்யவேண்டும் என அரண்மனை வட்டாரம் திட்டமிட்டது குறித்த செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். ஆக, அவர்கள் மன்னர் அல்லது மகாராணி இயற்கை எய்தினால் என்ன ஆகும் என்பது குறித்து பேசுவதை தவறாக நினைப்பதில்லை.
Image: AP
அவ்வகையில், மன்னர் சார்லஸ் இயற்கை எய்தினால், அடுத்து என்ன ஆகும் என்பது குறித்த செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.
அப்படி சார்லஸ் இயற்கை எய்தினால், அவருக்கு பதில், இளவரசர் வில்லியம் மன்னராவார். அப்போது, கேட்தான் பிரித்தானியாவுக்கு ராணி. அப்படியானால் கமீலா என்னவென்று அழைக்கப்படுவார்?
மன்னர் சார்லஸ் இயற்கை எய்தி, அதற்குப் பின் வில்லியம் மன்னராகும்போது, கமீலா, Queen Dowager என்று அழைக்கப்படுவாராம்.
Queen Dowager என்பதற்கு, மறைந்த மன்னரின் மனைவி, அல்லது மன்னரின் விதவை என்று பொருளாம்! ஆக, மீண்டும் ஒருமுறை கமீலாவின் பட்டம் மாற உள்ளதாம்...