ஒட்டுமொத்த உலகமும் துணை நிற்கிறது: உக்ரைனில் ஜோ பைடன் ஆவேசம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.
போலந்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம்
ஜனாதிபதி ஜோ பைடன் போலந்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் தொடர்பில் அறிவிப்பு வெளியான நிலையில், உக்ரைன் பயணம் குறித்து வெள்ளைமாளிகை திட்டவட்டமாக மறுத்தது.
@AFP
இந்த நிலையில், ஜனாதிபதி ஜோ பைடன் சிறப்பு விமானத்தில் வாஷிங்டனில் இருந்து போலந்துக்கு புறப்பட்டார். போலந்து தலைநகர் வார்சாவில் அவரது விமானம் தரையிறங்கியது.
அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் 10 மணி நேரம் பயணம் செய்த பைடன், நேற்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் வந்தடைந்தார். அவரது பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
விமானத்தில் பயணம் செய்தால், ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ரயிலில் அவர் உக்ரைன் சென்றதாக கூறப்பட்டது. ஒருவேளை, ரயில் மீது ரஷ்ய ராணுவம் திடீர் தாக்குதல் தொடுத்தால் அதை முறியடிக்க போலந்து, உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
@reuters
கீவ் ரயில் நிலையத்தில் இறங்கிய ஜனாதிபதி ஜோ பைடன், அங்கிருந்து சிறப்பு வாகனத்தில் மேரின்ஸ்கி அரண்மனைக்கு சென்றார். அவரை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வரவேற்றார்.
இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சூழலில் பேசிய ஜோ பைடன், ஓராண்டுக்கு முன்பு உக்ரைன் மீதுதாக்குதல் தொடங்கப்பட்டது. அந்த நாடு வீழ்ந்துவிடும் என்று சிலர் கூறினர்.
கம்பீரமாக எழுந்து நின்று போராடுகிறது
ஆனால் ஓராண்டாக உக்ரைன் கம்பீரமாக எழுந்து நின்று போராடுகிறது. அமெரிக்கா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் உக்ரைனுக்கு துணை நிற்கிறது. உக்ரைன் ராணுவத்துக்கு அதிநவீன ஹிமர் ஏவுகணைகள், கவச வாகனங்கள், வான்பரப்பை கண்காணிக்க அதிநவீன ரேடார்கள் வழங்கப்படும்.
@AFP
கூடுதலாக 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவோம். உக்ரைன் மக்களின் நலனுக்காக அமெரிக்க நிதிநிலை அறிக்கையில் தாராளமாக நிதி ஒதுக்கப்படுகிறது என்றார்.
உக்ரைன் தலைநகர் கீவில் சுமார் 5 மணி நேரம் தங்கியிருந்த ஜனாதிபதி ஜோ பைடன் மாலை ரயில் மூலம் போலந்துக்கு புறப்பட்டு சென்றார்.