ரஷ்ய ஜனாதிபதி ரகசியமாக வெளியிட்ட பட்டியல்: கொலை நடுக்கத்தில் பிரித்தானியாவில் வசிக்கும் 6 பேர்
ரஷ்ய ஜனாதிபதி புடின் தமது அரசில் நகர்வுகளுக்கு எதிராக உள்ளவர்களை தீர்த்துக்கட்டும் கொலை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 6 பேர்கள் தற்போது பிரித்தானியாவில் வசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், பிரித்தானியாவின் Salisbury பகுதியில் கொடிய ரசாயனத்தால் தாக்குதலுக்கு இலக்கான Sergei Skripal என்பவர் பல மாதங்களாக ரஷ்யாவின் கண்காணிப்பில் இருந்தவர் எனவும், படுகொலைக்கு குறி வைக்கப்பட்டவர் எனவும் உளவு அதிகாரி ஒருவரால் அம்பலமாகியுள்ளது.
ரஷ்யா குறிவைத்துள்ள ஒருவருக்கு, உளவு அதிகாரி ஒருவர் ரகசியமாக அளித்த கடிதத்தில், அவர்கள் உங்களை மிக அருகாமையில் நெருங்கி விட்டனர். உடனடியாக தற்போது வசிக்கும் இடத்தில் இருந்து வேறு பகுதிக்கு செல்லவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்ன என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த வாரம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், தற்போதைய சூழலில் பிரித்தானியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் ரஷ்யா என அடையாளம் காணப்பட்டு, அதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே, ரஷ்ய ஜனாதிபதியின் கொலை பட்டியல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி தொடர்பில், அவருக்கு ஆதரவான முக்கிய நபர்களை புடின் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ரஷ்யாவின் சிறப்பு படை ஒன்று அயர்லாந்தில் ஒருங்கிணைந்துள்ளதாகவும், அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய, உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் எச்சரிக்கை தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா காலகட்டம் என்பதால் இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு ரகசிய நடவடிக்கைகளை ரஷ்யா தற்போது மீண்டும் துவக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
