ஆசிய நாடொன்றில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! பாதுகாப்பு நடவடிக்கை என அறிவிப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் 12 பயங்கரவாதிகள் உளவுத்துறை நடவடிக்கையால் கொல்லப்பட்டனர்.
12 பயங்கரவாதிகள்
பாகிஸ்தானின் வடக்கு Waziristanயின் ஹசன் கெல் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்தது.
இரவில் நடந்த இந்த சண்டையில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் மறைவிடத்தை திறம்பட குறிவைத்து 12 பயங்கரவாதிகளை அழித்தனர்.
சுத்திகரிப்பு நடவடிக்கை
அப்பகுதியில் மீதமுள்ள பயங்கரவாதிகளின் இருப்பை ஒழிப்பதற்கான ஒரு சுத்திகரிப்பு நடவடிக்கை நடந்து வருகிறது.
பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் உறுதியை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று ISPR அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் எனவும் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |