இலங்கையின் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இது தான் காரணம்! இந்திய அரசுக்கு சீமான் எச்சரிக்கை
இலங்கையின் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு சிங்கள இனவாத அரசுகளின் கொடுங்கோன்மை ஆட்சியும், இனவெறிச்செயல்பாடுகளுமே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை நாட்டில் நிலவி வரும் பெரும் பொருளாதார வீழ்ச்சியும், அத்தியாவசியப்பொருட்களின் கட்டுங்கடங்காத விலையுயர்வும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிற செய்தியறிந்தேன்.
அந்நாட்டின் குடிகளாகிய அடித்தட்டு உழைக்கும் மக்களும், அன்றாடங்காய்ச்சிகளும் உணவுக்கே அல்லல்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டு, வறுமையும், ஏழ்மையும் அங்கே தலைவிரித்தாடுகிற செய்திகள் கவலையைத் தருகின்றன.
நாட்டின் நலன், மக்களின் பொருளாதார மேம்பாடு போன்றவற்றில் துளியும் கவனம்செலுத்தாது, தமிழர்கள் மீதான இனவெறிச்செயல்பாடுகளிலும், இனஅழிப்பு வேலைகளிலுமே கவனம் செலுத்தி வந்த சிங்களக்கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கோர முகங்கள் இன்றைக்கு முழுவதுமாகத் தோலுரிக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கையின் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு சிங்கள இனவாத அரசுகளின் கொடுங்கோன்மை ஆட்சியும், இனவெறிச்செயல்பாடுகளுமே காரணம்!https://t.co/HGDQqM2LRx pic.twitter.com/blSpCBe71e
— சீமான் (@SeemanOfficial) March 20, 2022
ஆகவே, இந்திய ஒன்றியத்தினுடையப் பிராந்திய நலன்களுக்கு முற்றாக எதிர்திசையில் பயணித்து, சீனாவோடு இணக்கமாக இருக்கும் இலங்கை நாட்டையும், அதன் ஆட்சியாளர்களையும் எச்சரிக்காமல், அவர்களை அரவணைத்து அனுசரித்துச்செல்லும் போக்கு, வருங்காலங்களில் இந்தியாவுக்கு மோசமானப் பின்விளைவுகளை பூகோளரீதியாக ஏற்படுத்தும் என இந்தியாவை ஆளும் பாஜக அரசை எச்சரிக்கிறேன் என சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.