டிசம்பரில் இயற்கை காட்டிவிட்டது! பரந்தூர் விமான நிலைய 3டி மாதிரி குறித்து சீமான் விமர்சனம்
பரந்தூர் விமான நிலையத்தின் 3டி மாதிரி வைக்கப்பட்டிருந்ததற்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம்
காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக சில கிராமங்கள் கையகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு 13 கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியினரும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பரந்தூர் விமான நிலையத்தின் 3D மாதிரி வைக்கப்பட்டிருந்ததற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீமான் கடும் கண்டனம்
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பரந்தூர் வானூர்தி நிலையத்தின் முப்பரிமாண மாதிரியை வைத்த தமிழ்நாடு அரசுக்கு, ஒருவேளை இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னையின் முப்பரிமாண மாதிரி எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டுமென்றால், அதன் நேரலைக் கட்சியினை 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் இயற்கை காட்டிவிட்டது என்று நினைவுகூற கடமைப்பட்டுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத்தில் Michaung புயலில் தாக்குதலால் சென்னை கடும் பாதிப்புக்கு உள்ளானது. அதனை சீமான் ''முதல் வாரத்தில் இயற்கை காட்டிவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |