கலாஷேத்ரா விவகாரத்தில் உண்மையில்லாமல் போராட மாட்டார்கள்..அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..கொந்தளித்த சீமான்
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கலாஷேத்ரா விவகாரம் தொடர்பில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு
சென்னையில் கலாஷேத்ராவில் பணியாற்றும் பேராசிரியர்கள் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை முன்வைத்த மாணவிகள் பலர் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து நடிகைகள் கருத்து தெரிவித்து சலசலப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்விகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
சீமான் வலியுறுத்தல்
அவர் கூறுகையில், 'கலாஷேத்ரா விவகாரத்தில் உண்மை இல்லாமல் போராட்டம் நடத்த வாய்ப்பில்லை. இவ்விவகாரம் தொடர்பாக அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை. குற்றவாளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழரின் உரிமைக்காக குரல் கொடுப்பவன் பாசிஸ்ட் என்றால், நான் பாசிஸ்ட் தான்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும், சுங்கக் கட்டணத்தை நிறுத்த வேண்டும், தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தொழில்களில் தமிழர்களுக்கு 80 சதவீத வேலையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட சில விடயங்களையும் வலியுறுத்தினார்.