2026 தேர்தலில் யாருடன் கூட்டணி? இயேசு மீது சத்தியம் செய்து கூறிய சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்குபெற்று, அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சீமான் கூட்டணி
இதில் பாஜக உடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "கால் விழுக்காடு, அரை விழுக்காடு வாக்கு வாங்கும் கட்சிகளுடன் கூட்டணி பேசும் போது, 8.5 விழுக்காடு வாக்கு வங்கி வைத்திருக்கும் பாஜக என்னுடன் கூட்டணி பேசி இருக்க மாட்டார்களா?
இந்த 15 வருடங்களில் எவ்வளவு அழுத்தங்கள் வந்திருக்கும், பாஜக உடன் கூட்டணி வைப்பது என்றால் அப்போது வைத்திருக்க மாட்டேனா? ஒவ்வொரு தேர்தலிலும் கேட்கிறீர்கள். இப்போதும் சொல்கிறேன் இந்திய மற்றும் திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது.
இயேசு மீது ஆணை
மக்களுடன் மட்டுமே தேர்தல் உடன்பாடு. இறைமகன் இயேசு மீது ஆணையிட்டு கூறுகிறேன். எப்போதும் தனித்தே நிற்போம். 234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான்.
பாஜகவை தனியாக நிற்க சொல்லுங்கள். நானும் தனியாக நிற்கிறேன். முடிந்தால் என்னை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கி காட்டட்டும். திமுகவை தனியாக நின்று வாக்கு பணம் கொடுக்காமல் என்னை விட ஒரு ஓட்டு அதிகமாக வாங்கி காட்டட்டும்.
திமுகவை எதிர்த்தால் பாஜக காசு கொடுக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி. பாஜகவை எதிர்த்தால், இஸ்லாமிய கிறிஸ்தவ கைக்கூலி. அதிமுகவை எதிர்த்தால் திமுகவின் B டீம்.
விஜய்யை எதிர்க்கவே இல்லை. கேள்வியே எழுப்புகிறோம். அதையே விமர்சனம் என்கிறார்கள்.திமுக காசு கொடுக்கிறது என்கிறார்கள்" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |