ஒடிசா ரயில் விபத்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்! விரைவான நடவடிக்கை வேண்டும்..நாம் தமிழர் சீமான்

Naam tamilar kachchi Seeman Odisha Train Accident
By Sivaraj Jun 03, 2023 07:59 AM GMT
Report

ஒடிசா ரயில் விபத்து செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

உலகளவில் மோசமான ரயில் விபத்து

இந்திய மாநிலம் ஒடிசாவில் நிகழ்ந்த கோர விபத்தில் 288 பேர் பலியானதாக தகவல் வெளியானது. இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விமானப்படையும் மீட்பு பணிகளில் இறங்கியுள்ளது. உலகளவில் மிக மோசமான ரயில் விபத்தில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்! விரைவான நடவடிக்கை வேண்டும்..நாம் தமிழர் சீமான் | Seeman Shock For Odisha Train Accident Statement  Getty Images

சீமான் வேதனை

கோர விபத்து குறித்து அதிர்ச்சியடைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு தொடர்வண்டி, ஒடிஷா மாநிலம் பாஹாநாகா பஜார் தொடர்வண்டி நிலையம் அருகே விபத்திற்குள்ளான செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன்.

சீமான்/Seeman

இக்கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த, காயமுற்றவர்கள் செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற செய்தி கவலையையும், துயரத்தையும் தருகிறது' என தெரிவித்துள்ளார்.   

ஒடிசா ரயில் விபத்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்! விரைவான நடவடிக்கை வேண்டும்..நாம் தமிழர் சீமான் | Seeman Shock For Odisha Train Accident Statement 

மேலும் அவர், 'இக்கொடிய விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். படுகாயமுற்றோர் விரைந்து நலம்பெற்று திரும்பிட விழைகிறேன். இக்கொடும் நிகழ்வு எதிர்பாராத விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா அல்லது அதிகாரிகளின் கவனக்குறைவால் ஏற்பட்டதா என்பதை உடனடியாக இந்திய ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்திட வேண்டும். வனப்பகுதியில் நடந்த இக்கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் ஏற்பட்டுள்ள தொய்வு மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் வன்மையான கண்டனத்திற்குரியது' எனக் கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்! விரைவான நடவடிக்கை வேண்டும்..நாம் தமிழர் சீமான் | Seeman Shock For Odisha Train Accident Statement

துயர் துடைப்பு நிதி 

அத்துடன், பயணிகளை மீட்பதிலும், அவர்களுக்கு உரிய மருத்துவம் அளிப்பதிலும் எவ்வித தாமதமும் ஏற்படாமல் இருக்க ஒடிசா மாநில அரசும், இந்திய ஒன்றிய அரசும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு மீட்புப்பணியை விரைவுப்படுத்த பேரிடர் மீட்புப் படையினர் மட்டுமல்லாது துணை இராணுவத்தையும் உடனடியாக அனுப்ப வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்தான தகவல்களை உடனுக்குடன் அவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும், துயர் துடைப்பு உதவிகள் வழங்கிடவும் தமிழ்நாடு அரசு மீட்புக்குழு ஒன்றினை விரைந்து அமைத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இத்தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 50 இலட்சமும், காயமுற்றோருக்கு தலா ரூபாய் 10 இலட்சமும் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமென இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.     

ஒடிசா ரயில் விபத்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்! விரைவான நடவடிக்கை வேண்டும்..நாம் தமிழர் சீமான் | Seeman Shock For Odisha Train Accident Statement 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US