செருப்பு சின்னத்தில் கூட வெற்றி பெறுவேன்: சீமான்
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை திட்டமிட்ட செயலாக பார்க்கிறேன் என்றும், மக்களவை தேர்தலில் செருப்பு சின்னம் கொடுத்தால்கூட வெற்றி பெறுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் அவர், தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்துள்ளேன், இன்று நீதிமன்றத்தில் வரலாம், அடுத்து உச்சநீதிமன்றம் செல்வேன்.
நான் முதலில் புலி கேட்டேன். அது தேசிய விலங்கு என்று சொன்னார்கள், அடுத்து மயில் கேட்டேன், தேசிய பறவை என்றார்கள்.
நாங்கள் ஏற்கனவே 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறோம், 7 விழுக்காடு.
எந்த சின்னமாக இருந்தாலும் போட்டியிடுவேன், சீமானின் சின்னம் என்ன என்று பார்த்து தான் வாக்களிப்பார்கள்.
செருப்பு சின்னம் கொடுத்தால் கூட நான் வெற்றி பெறுவேன், வேளாண் குடிமகன் என்பதால் கரும்பு விவசாயி சின்னத்திற்காக போராடுகிறேன் என தெரிவித்துள்ளார்.