நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றிவிடுவோம்! சீமான்
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 17ம் திதி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழத்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு எழுந்து நிற்பதில் இருந்து வலிக்கு அளிக்கப்படுகிறது என அறிவித்தார்.
இந்நிலையில், முத்தமிழ்க்காவலர் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 19-12-2021 ஞாயிறு, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான், தமிழ்த்தாய் வாழ்த்தின் அனைத்து வரிகளையும் பயன்படுத்து வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளது பாராட்டத்தக்கது என கூறினார்.
அன்றைக்கு கருணாநிதி, ‘ஆரியம் போல் வழக்கொழிந்து’, அதாவது ஆரிய மொழி சமஸ்கிருதம் போல் செத்துபோகாமல் என்ற வரிகளை தமிழத்தாய் வாழ்த்து பாடலிருந்து எடுத்துவிட்டார்.
நாங்கள் தமிழ்த்தாய் வாழ்த்தையே மாற்றப்போகிறோம், அந்த பாட்டிற்கு பதிலாக வேற பாட்டு வைக்கப்போகிறோம்.
நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும் போது வேற பாட்டு இருக்கும், அதனால் அதைப்பற்றி பேசி பயனில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்தின் முழுப்பாட்டையும் கொண்டுவர சொல்லி பாஜக கோருவதை பாராட்ட வேண்டும் என சீமான் கூறினார்.