தேர்தலில் அண்ணாமலையிடம் சவால் விட்டு தோற்றுப்போன சீமான்.., என்ன சவால் விட்டார்?
தமிழகம், புதுச்சேரி உள்பட 40 மக்களவை தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காத நிலையில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மைக் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆனால், நாம் தமிழர் கட்சியானது 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது.
சில இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி வந்துள்ளது. குறிப்பாக 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
சீமான் பேசியது
முன்னதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களவை தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்த பாஜகவின் வாக்குகள் நாம் தமிழர் கட்சியை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிடுகிறேன்" என்றார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது.
அதேபோல இந்த தேர்தலில் பாஜக கூட்டணி 18 சதவிகிதம் வாக்குகளையும் பாஜக தனியாக 11.5 சதவிகிதம் வாக்குகளையும் வாங்கி உள்ளது. இத வாக்கு சதவிகிதம் நாம் தமிழர் கட்சியை விட அதிகமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |