பங்களா வாடகை 3 லட்சம் கொடுத்து பரம ஏழையாக வாழும் சீமானுக்கு சிரமம் தான்: தொடரும் விமர்சனம்
உயர்குடி பணக்கார்கள் மட்டுமே படிக்கும் 28 ஆயிரம் அரசு தமிழ்வழி பள்ளியில் தன் பிள்ளைகளை படிக்க வைப்பது சிரமம் தான் என ராஜீவ் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லை
நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி சீமானிடம், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் கௌசிக், வேட்பு மனுதாக்கலின்போது தமிழ் படிக்கத் தெரியாமல் இருந்தது குறித்து சீமானிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "என் பிள்ளைக்கு தமிழர் தெரியவில்லை என்று சொல்வது எனக்கு அவமானமில்லை. வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும்.
என் மகன்கள் இருவரும் கூட ஆங்கில கல்வி வழியில் தான் படிக்கிறார்கள். அதற்கு நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லை" என்று கூறியுள்ளார்.
ராஜிவ் காந்தி விமர்சனம்
இதற்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி விமர்சித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர்,
கடற்கரை பங்களா வீட்டு வாடகை 3 லட்சம்
4 மகிழுந்து (CAR)
20 விமான பயணம்
5 சமையல்கார்
5 தோட்ட வேலையாள்
10 பாதுகாவலர்
இரண்டு நேர உடற்பயிற்சி கூடம்!
வெளியீரில் தங்க 5 ஸ்டார் hotel
தினம் A2 நாட்டுமாட்டு பால்
சீமை வளர்ப்பு நாய்
2 ஆஸ்திரேலியன் கிளி
என பரம ஏழையாக வாழும் என் பாசக்கார அண்ணன் சீமானால், உயர்குடி பணக்கார்கள் மட்டுமே படிக்கும் 28 ஆயிரம் அரசு தமிழ்வழி பள்ளியில் தன் பிள்ளைகளை படிக்க வைப்பது கொஞ்சம் சிரமம் தான்" என்று கூறியுள்ளார்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |