என்னை பார்த்தால் பயப்படுவது போல் உள்ளதா? கைது குறித்த கேள்விக்கு சீமானின் பதில்
திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விரைவில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில் கோவையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஒரு மனிதனை 24 மணி நேரமும் பரபரப்பாக வைத்துள்ளீர்கள் என்றார்.
சீமானின் பதில்
உங்களை பரபரப்பாக வைத்திருப்பது குறித்து பின்னணியில் ஏதேனும் அரசியல் பின்னணி உள்ளதாக நினைக்கீறிர்களா என்ற கேள்விக்கு ''நாடே பரபரப்பாக உள்ளது அதற்கு காரணம் தேர்தல் தானே,அப்போ என்னைச்சுற்றி ஒரு பரபரப்பு இருக்கும்தானே'' என்று சீமான் பதிலளித்துள்ளார்.
உங்களை தேடி தனிப்படை வந்து உள்ளதாகவும் உதகையிலோ அல்லது கோவையிலோ கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்களே?என்ற கேள்விக்கு உதகையில் காவல்துறை உள்ளது. அங்கே கைது செய்து இருக்கலாம். சென்னைக்கு மறுநாள் சென்றுவிடுவேன் அங்கு வர வேண்டி அழைப்பு ஆணையை கொடுத்திருக்கலாம்.என்று சீமான் கூறியுள்ளார்.
சம்மன் ஏதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா?என்ற கேள்விக்கு ''எதுவும் இல்லை,சட்டப்படி என்றல் சட்டப்படி சந்திப்போம்,அரசியல் என்றல் அரசியல் ரீதியாக சந்திப்போம்'' என்றார்.
சீமான் வழக்கறிஞர் சிவகுமார் கூறுகையில்
இந்த வழக்கு 2011ஆம் ஆண்டு புனையப்பட்டது.புகார் கொடுத்தவர் விசாரணைக்கு பிறகு அந்த அம்மாவே தூண்டுதல் பேரில் புகார் கொடுத்ததாக கைப்பட எழுதிக்கொடுத்துள்ளார்.
விஜயலட்சுமி அளித்த புகாருக்கு பிறகு பலமுறை சீமான் அவர்கள் சிறைக்கு சென்று வந்துவிட்டார். விஜயலட்சுமி வழக்கில் அவரை கைது செய்ய வேண்டி இருந்தால் சிறையிலேயே செய்து இருக்கலாம். சீமான் அவர்களை பழிவாங்க வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார்கள் என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |