செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் கைது இல்லை! அமலாக்கத்துறை அறிவிப்பு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது.
பின்னர், புகாரின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் சில காரணங்களை கூறி ஆஜராகாமல் இருந்தார்.
மேலும், அசோக் குமாரின் மனைவியின் பெயரில் கட்டப்பட்டு வந்த பெரிய பங்களா தொடர்பான நில மோசடி குறித்து விசாரிக்க அவரது மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவரும் ஆஜராகவில்லை.
கைது செய்யவில்லை
இந்நிலையில், நேற்று கொச்சியின் உள்ள விமான நிலையத்தில் அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கு, அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்து, "அசோக் குமார் கைது செய்யப்படவில்லை எனவும், கொச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை" எனவும் கூறியுள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பயந்து அசோக் குமார் வெளிநாட்டிற்கு தப்பி சென்றிருக்க கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |