செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் திடீர் திருப்பம்!

V. Senthil Balaji DMK BJP
By Fathima Jun 21, 2023 07:34 AM GMT
Report

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்தது தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறையினர் செயல் அதிருப்தி அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இன்று அவருக்கு இதய அறுவைசிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் திடீர் திருப்பம்! | Senthil Balaji Case Supreme Court

இந்நிலையில் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தலாம் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.

23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கலாம் என சில கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தார்.

இதற்கிடையே சிகிச்சையில் இருந்ததால் அமலாக்கத்துறை விசாரிப்பதில் சிக்கல்கள் எழுந்தது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு உயர்நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் திடீர் திருப்பம்! | Senthil Balaji Case Supreme Court

இத்துடன் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு வெளியே அழைத்து செல்லாமல் விசாரணை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்றாகும், இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், மருத்துவமனையில் ஒருவர் இருக்கும் போது காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா? உடல்நிலை சரியில்லை என மருத்துவ அறிக்கை அளித்த பின்னரும் காவலில் எடுக்க கோருகிறீர்களா? என கேள்வி எழுப்பினர்.


மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்திருப்பது அதிருப்தி அளிக்கிறது என தெரிவித்தனர்.

செந்தில் பாலாஜி உடல்நிலை சீரடைந்த பின்னர் விசாரணை நடத்தலாம் என்றும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சந்தேகிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் வைத்த கோரிக்கைகளை நீதிபதிகள் நிராகரித்ததுடன், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதால் அந்த தீர்ப்புக்கு பிறகு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தனர்.

செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் திடீர் திருப்பம்! | Senthil Balaji Case Supreme Court

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US