செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
செந்தில் பாலாஜி விவகாரம்
இந்திய மாநிலம், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார்.
பின்பு அவர், நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதனையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன்பு இன்று வந்தது.
அப்போது, இந்த மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை வரும் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை ஜூலை 26 ஆம் திகதி மதியம் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |