ஊழல் செய்த செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா? அமித் ஷா கேள்வி
இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள திமுக கட்சியை குடும்ப கட்சி என்று கூறியது மட்டுமல்லாமல், ஊழல் செய்த செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா என்று அமித் ஷா நேற்று உரையாற்றினார்.
அண்ணாமலை நடைபயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் 9 ஆண்டு கால சானைககளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார்.
வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு என் மண் என் மக்கள் மோடியின் தமிழ் முழக்கம் என்ற கோஷங்களை எழுப்பி நடைபயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் 5 பகுதிகளாக இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 168 நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணமானது 1700 கி.மீ. தூரம் நடந்து செல்லும் வகையிலும், 900 கி.மீ. தூரம் வாகனம் மூலம் செல்லும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைபயணத்தினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திமுக குடும்ப அரசியல்
அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசிய அமித் ஷா,"இந்தியாவில் 9 ஆண்டு கால பாஜக ஆட்சியின் திட்டங்கள் வீடுகளுக்கு சென்றடைந்துள்ளது. வருகிற தேர்தலிலும் மக்கள் பாஜகவிற்கு ஆதரவை அளிப்பார்கள்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், " தமிழகத்தில் உள்ள நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு பல கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ஊழல் செய்த செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா என்று அண்ணாமலை ட்வீட் செய்தால் திமுக ஏன் அஞ்சுகிறார்கள்" என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். குடும்ப கட்சிகள் இணைந்து தான் கூட்டணியை நடத்துகின்றன.
அதனால், அவர்கள் வீட்டுக்கு மட்டும் தான் நன்மை, நாட்டிற்கு இல்லை. தமிழகத்தில் அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அமித் ஷா பேசினார். இதனிடையே, அமித்ஷா இன்று இராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |