ஆடி அமாவாசையில் செந்தில் பாலாஜி பெயரில் அர்ச்சனை! குடும்பமே கோயிலில் வழிபாடு
தமிழ்நாடு, திருச்சியில் உள்ள சிவன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பமே சிறப்பு வழிபாடு செய்துள்ளது.
கோயிலில் வழிபாடு செய்த செந்தில் பாலாஜி குடும்பம்
தமிழ்நாடு, திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி திருநெடுங்குளம் திருநெடுங்கள நாதர் கோயிலில், செந்தில் பாலாஜி குடும்பம் சிறப்பு வழிபாடு செய்துள்ளது.
ஆடி அமாவாசையான இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, தாய் மற்றும் தந்தை ஆகியோர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தீராத நோய்களையயும் குணப்படுத்தும் ஸ்தலமாக இந்த கோயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது குடும்பத்தினர் திருநெடுங்கள நாதர், மங்களாம்பிகை, விநாயகர், வராகி அம்மன் சன்னதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரில் அர்ச்சனை செய்தனர்.
செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு
செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு அவர், நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது அவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தன்னைக் குற்றமற்றவர் என அவர் சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும். சட்டத்திற்கு அவர் அப்பாற்பட்டவர் அல்ல.
செந்தில் பாலாஜி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை நிராகரித்து மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |