தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஒரு சிக்கல்! நீதிமன்ற காவல் நீட்டிப்பு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை
செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகளான ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை முடித்து செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது. மேலும், அவரை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை எனவும் கூறியது.
மேலும், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை இல்லை எனவும், செந்தில் பாலாஜியை கைது செய்த பின்பு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை 5 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்படுவார் என்று உத்தரவிடப்பட்டது.
பின்பு, செந்திபாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு:
இந்நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜிக்கு இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |