செந்தில் பாலாஜியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம்.., சுமார் 8 கிலோ எடை குறைவு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும், சுமார் 8 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவரது இதயத்தில் 3 அடைப்புகள் இருந்ததை உறுதி செய்தனர். பின்பு, உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவிரி மருத்துவமனையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த 15 -ம் திகதி செந்தில் பாலாஜிக்கு தலை சுற்றல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சனையால் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்பு, அவர் மேல்சிகிச்சைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அன்றிரவே மாற்றப்பட்டார்.
உடல்நிலை மோசம்
அப்போது மருத்துவர்களிடம் சுமார் ஒரு மாதமாக 2 மணிநேரம் மட்டுமே தூங்குவதாகவும், பசியின்மை, தலைவலி போன்ற பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறினார். அதன் அடிப்படையில் மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டனர்.
சரியாக உணவு உட்கொள்ளாதல், மன அழுத்தம், உடல் எடை சுமார் 8 கிலோ குறைவு, ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அதுமட்டுமல்லாமல், செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் ரத்தம் அழுத்தம் குறையவில்லை. இதனால், செந்தில் பாலாஜியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |