மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி.., இன்று ஜாமீன் கிடைக்குமா?
நெஞ்வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி அங்கிருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜி
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கடந்த 2016 -ம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த 21-ம் திகதி மதியம் செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை சிறையில் இருந்து ஸ்டாலின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து நேற்று மாலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று ஜாமீன்?
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள் கிழமை நடந்தது. அப்போது, செந்தில் பாலாஜியின் உடல்நலனை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் இல்லாததால் வழக்கை வேறு நாளில் மாற்றி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை புதன்கிழமை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அதன்படி செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |