செர்பியாவில் பொதுமக்களை சரமாரியாக சுட்டு தள்ளிய இளைஞர்: 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
செர்பியாவில் காரில் சென்று கொண்டே பொதுமக்களை சுட்டு கொன்ற இளைஞரை காவல்துறை தேடி வருகிறது.
தொடரும் துப்பாக்கி சூடு
செர்பியாவின் தலை நகரான பெல்கிரேடில் அமைந்துள்ள பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
@skynews
இச்சம்பவம் நடைபெற்று 48 மணி நேரங்கள் கூட ஆகாத நிலையில், செர்பியாவின் மலடிநோவக் என்ற பகுதியில் 21 வயது இளைஞர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
@skynews
கடந்த மே 5ஆம் திகதி இரவில் அந்த நபர், காரில் சென்று கொண்டே தானியங்கி துப்பாக்கி மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தொடரும் தேடுதல் வேட்டை
இதனை தொடர்ந்து செர்பியன் உள்துறை அமைச்சர் இதனை பயங்கரவாத தாக்குதல் என கூறியுள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் 600க்கும் மேற்பட்ட பொலிஸார் குற்றவாளியை நகர் முழுதும் தேடி வருகின்றனர்.
@reuters
ஹெலிகாப்படர் மூலமாக தொடர் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் நகரின் எந்த அசம்பாவிதங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
@reuters
இந்நிலையில் செரிபியால் சாதாரணமாக துப்பாக்கி பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. மேலும் இதனை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
நாட்டின் குடிமக்கள் தங்களது துப்பாக்கிகளை தங்களது பிள்ளைகளுக்கு தெரியாமல், பாதுகாத்து வைக்குமாறு செர்பியன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.