இந்தியாவுக்கான புதிய தூதரை அறிவித்த டிரம்ப்! யார் இந்த செர்ஜியோ கோர்?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கான புதிய தூதராக அவரது நெருங்கிய உதவியாளரான செர்ஜியோ கோர்(Sergio Gor) என்ற நபரை பரிந்துரைத்துள்ளார்.
அதனுடன் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் சிறப்பு அமெரிக்க தூதராகவும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் செனட் சபையால் இது முழுமையாக அங்கீகரிக்கப்படும் வரை செர்ஜியோ கோர் தன்னுடைய பழைய பதவியில் தொடர்வார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான புதிய தூதர்
இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அறிவித்தார்.
செர்ஜியோ கோரை சிறந்த நண்பர் என வர்ணித்த டிரம்ப், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் தன்னுடைய பணிகளை நிறைவேற்றவும், அமெரிக்காவை மீண்டும் சிறப்பு மிக்கதாக மாற்றவும், நான் நம்பக்கூடிய ஒருவர் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Congratulations to @SergioGor! Sergio helped President Trump put together the best team in history, and he will be a great Ambassador for the Trump Administration overseas. pic.twitter.com/A2ujPZOKje
— Karoline Leavitt (@PressSec) August 22, 2025
38 வயதாகும் செர்ஜியோ கோர் தற்போது அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் இயக்குநராக உள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையே பதற்றம்
சமீபத்தில் டொனால்ட் டிரம்பின் புதிய வரி விதிப்பு கொள்கைகள் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமிக்கப்படுவது அதிக கவனம் பெற தொடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |