தொடரும் அட்டூழியம்... சுதந்திர தின பேரணியில் தலிபான்கள் வெறிச்செயல்! கொன்று குவிக்கப்பட்ட ஆப்கானியர்கள்
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற சுதந்திர தின பேரணியில் தலிபான் போராளிகள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Asadabad நகரிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. இன்று ஆப்கானிஸ்தானின் 102வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொண்டாடும் வகையில் Asadabad நகரில் உள்ள மக்கள் மூவர்ண தேசிய கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர்.
பேரணியில் ஆப்கான் தேசிய கொடியை அசைத்த மக்களை குறிவைத்து தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனையடுத்து, மக்கள் அலறியடித்து ஓடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலர் சிக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் சிக்கி பலர் உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த Mohammed Salim என்பவர் ஊடகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா அல்லது கூட்டநெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என Mohammed Salim தெரிவித்துள்ளார்.
எனினும், இச்சம்பவம் தொடர்பில் தலிபான்கள் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.