பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் பேரணி: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தென் ஆப்பிரிக்கா, ஏமன் மற்றும் துருக்கி ஆகிய பல நாடுகளில் மிகப்பெரிய ஆதரவு பேரணி நடைபெற்றுள்ளது.
பாலஸ்தீனத்திற்கு பெரும் ஆதரவு
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்திய பிறகு, பாலஸ்தீனத்தின் மீதான போரை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் இதையடுத்து பாலஸ்தீனத்தின் காசா நகரை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி ஒட்டுமொத்த நகரையும் சீர்குலைத்தனர்.
அத்துடன் தற்போது காசா நகரை நோக்கி தரைவழி போர் தாக்குதலை நடத்தவும் இஸ்ரேலிய படைகள் தயாராகி வருகின்றனர்.
Just In ?: A massive rally in Mississauga
— Yamaan Shahid (@realYamaan) October 15, 2023
Ontario today in solidarity with Palestine and against Canada's ?? support for Israel's terrorism and war crimes in Gaza ??#Gazagenocide #HamasTerrorist #Isarael #IsraelPalestineConflict #IsraeliWarCrimes #IsraelTerrorists #Palestine… pic.twitter.com/xq1VHg76CM
இந்நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு மத்திய கிழக்கு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் தென் ஆப்பிரிக்கா, ஏமன், துருக்கி ஆகிய நாடுகளிலும் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணிகளை நடத்தி வருகின்றன.
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளிலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பிரபல உலக தலைவர் நெல்சன் மண்டேலாவின் பேரன் கோசி மண்டேலா கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
?A massive protest and display of solidarity for Palestine in Rabat, the capital of Morocco??
— Aryan Khattak ???? (@iamaryankhattak) October 15, 2023
Free Palestinian??#Gazagenocide #HamasTerrorist #Isarael #IsraelPalestineConflict #IsraeliWarCrimes #IsraelTerrorists #Palestine #GazzeUnderAttack #غزة_الآن #طوفان_الاقصى_ pic.twitter.com/FUDB2pOPKq
மேலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த பேரணியில் இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோசி மண்டேலா கருத்து தெரிவித்தார்.
இதனிடையே ஹவுத்தி அமைப்பினர் பிற அமைப்புகளுடன் இணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |