குடிநீருக்கு செக்ஸ், உணவுக்கு செக்ஸ், தொட்டத்துக்கெல்லாம்.., முகாம்களில் கொடூரமான வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்கள்
லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் மனித உரிமைகளை மீறுவதாகவும், மக்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியது.
காவலர்களின் கைகளில் அவர்கள் கொடூரமான பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர், இதில் சுத்தமான நீர், உணவு மற்றும் சுகாதாரத்திற்கான அணுகலுக்காக உடலுறவில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை மத்தியதரைக்கடலில் பிடிபட்டவர்கள் மற்றும் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் லிபியாவில் குடியேறியவர்கள் மீது கவனம் செலுத்துகிறது. சமீபத்தில் முகாம்கள் லிபிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் மோசமான நிலைமைகள் நீடிக்கிறது.
முகாம் காவலர்கள், "ஒருவேளை உனக்கு குடிநீர், படுக்கை ஏதாவது வேண்டுமென்றால், என்னுடன் உடலுறவு கொள்" என்று நிர்பந்திப்பதாக முகாம்களில் பாதிக்கப்பட்ட, உடலுறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட பல பெண்களில் ஒருவர் அம்னஸ்டியிடம் கூறியுள்ளார்.
நைஜீரியா, சோமாலியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இருந்து 14 முதல் 50 வயதுக்குட்பட்ட 53 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை இந்த அமைப்பு நேர்காணல் செய்தது. அதில் பெரும்பாலும் லிபியாவில் முகாம்களை விட்டு தப்பித்து வந்தவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
லிபியாவில் கர்ப்பிணிப் பெண்கள் காவலர்களால் மீண்டும் மீண்டும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள், அதே நேரத்தில் ஆண்கள் அவர்களை இழிவுபடுத்துவதற்காக உள்ளாடைகளுடன் மட்டுமே சுற்றித் திரிய வேண்டிய கட்டாயம் உள்ளது.
முகாம்களில் 2017-ஆம் ஆண்டு முதல் இது போன்ற பல குற்றச்சட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி கொண்ட லிபிய கடலோர காவல்படையினர் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் 15,000 பேரை கடலில் தடுத்து லிபியாவிற்கு திருப்பியுள்ளனர். இது 2020-ஆம் ஆண்டை விட அதிகமானவர்கள் என்று அம்னெஸ்டி அமைப்பு கூறுகிறது.
இந்த தரவு நம்பமுடியாதது போல் இருந்தாலும், சென்ற ஜூன் மாத இறுதியில் மட்டும் 6,100 பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டதாக அம்னஸ்டி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லிபியா புலம்பெயர்ந்தோருக்கு ஒரு 'பாதுகாப்பான நாடு' அல்ல என்று கூறி, கடலோர காவலர்களுக்கு நிதியளிப்பதை நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சிலர் ஐரோப்பிய ஆணையம் மற்றும் அதன் நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளனர்.