ஆனந்த் அம்பானியுடன் புத்தாண்டு கொண்டாட கிளம்பிய ஷாருக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் குஜராத்திற்கு கிளம்பி சென்றுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டம்
பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் வரும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு இடங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராய் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது மகளுடன் வெளிநாடு கிளம்பியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் தனது 59-வது பிறந்தநாளை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் காம்ப்ளக்ஸில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார். அந்த விழாவில் ஆனந்த் அம்பானி, நிதா அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகாவுடன் இணைந்து நடிகர் சல்மான் கான் ஷாப்பிங் செய்தார்.
இந்நிலையில், வரும் 2025-ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடுவதற்காக நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்தோடு ஜாம்நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அவர் மும்பை விமான நிலையத்திற்கு சென்றபோது தொப்பியால் தனது முகத்தை மறைந்திருந்தார். அவருடன் அவரது மனைவி கெளரி கான், மகன் ஆப்ராம் புறப்பட்டனர்.
குஜராத்தில் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாட நடிகர் ஷாருக்கான் முடிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |