பிக்பாஷில் படுமோசமாக பந்துவீசிய பாகிஸ்தான் கேப்டன்: பாதியில் வெளியேற்றம்..ஏன் தெரியுமா?
பாகிஸ்தானின் ஷாஹீன் ஷா அஃப்ரிடி பிக் பாஷ் லீக் போட்டியில் பாதியில் வெளியேற்றப்பட்டது பரபரப்பானது.
ஷாஹீன் ஷா அஃப்ரிடி
கீலொங்கின் சிமொன்ட்ஸ் மைதானத்தில் நடந்த பிக் பாஷ் லீக் போட்டியில், மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தியது.
Wow.
— KFC Big Bash League (@BBL) December 15, 2025
On his BBL debut, Shaheen Afridi has been removed from the attack! #BBL15 pic.twitter.com/IhDLsKFfJi
இந்தப் போட்டியில் பிரிஸ்பேன் வீரர் 2.4 ஓவர்கள் வீசி 43 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். முதன்மை பந்துவீச்சாளரான அவர் 4 ஓவர்களையும் முழுமையாக வீசவில்லை.
ஏனெனில், மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தை high full toss ஆக வீசினார். பின் 4வது பந்தை துடுப்பாட்ட வீரரை தாக்கும் விதமாக full toss ஆக வீசினார்.
வெளியேற்றம்
இதனால் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அடுத்த பந்தை சரியாக வீசிய அவர், 5வது பந்தையும் அதேபோல் வீசினார்.
ஒரே ஓவரில் தொடர்ச்சியாக துடுப்பாட்ட வீரர்களை தாக்கும் விதமாக 3 முறை பந்துவீசியதால், ஷாஹீன் ஷா அஃப்ரிடி 2.4 ஓவர்களுடன் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் மீதமிருந்த 1.2 ஓவரை மெக் ஸ்வீணி வீசி 24 ஓட்டங்கள் கொடுத்தார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஃப்ரிடி இவ்வாறு பந்துவீசி வெளியேற்றப்பட்டது பிக் பாஷ் லீக்கில் பரபரப்பானது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |