அவுஸ்திரேலியா வீரர்களை அசால்ட்டாக எடுத்த ஷகிப் அல் ஹசன்! எப்படி அவு ஆகியிருக்காங்க பாருங்க: வைரலாகும் வீடியோ
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஐந்தாவது டி20 ஷகிப் அல் ஹசன் எடுத்த விக்கெட்டுகளின் வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
வங்கதேசம்-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது.
இப்போட்டியில் அவுஸ்திரேலியா இந்தளவிற்கு மோசமாக தோற்க ஷகிப் அல் ஹசனின் சுழற்பந்து வீச்சும் ஒரு காரணம், 3.4 ஓவர் வீசிய அவர் வெறும் 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
#ShakibAlHasan was in top form last night, storming through the @CricketAus line-up to become only the 2️⃣nd player to take 100 wickets in T20I! ?
— FanCode (@FanCode) August 10, 2021
Watch the highlights of the 5th T20I on #FanCode ?https://t.co/0WNj3emUpr #CricketOnFanCode #BANvAUSOnFanCode #BANvAUS@BCBtigers pic.twitter.com/eZAOjEEQue
இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மேலும், இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஷாகிப் அல் ஹசன் 102 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதில், இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 107 விக்கெட்டுகள் கைப்பற்றி, 100 விக்கெட்டுகளை கடந்த முதல் வீரர் என்ற பெருமையுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.