முதல் BBL விக்கெட்டை வீழ்த்திய பின்..ஷூவை காட்டி கொண்டாடிய வீரரின் வீடியோ வைரல்
பிக் பாஷ் லீக்கில் தென் ஆப்பிரிக்காவின் ஷம்ஸி, தனது அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பெர்த் வெற்றி
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் முதலில் ஆடி 153 ஓட்டங்கள் சேர்த்தது. மிட்சேல் மார்ஷ் 37 (33) ஓட்டங்களும், ஃபென்னிங் 31 (24) ஓட்டங்களும் எடுத்தனர்.
PICK UP THE PHONE 👟 📞
— KFC Big Bash League (@BBL) January 4, 2026
Tabraiz Shamsi has his first BBL wicket, and his celebration was GOLD! #BBL15 pic.twitter.com/SyT41d3H32
பின்னர் ஆடிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் 120 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக லியாம் ஸ்காட் 33 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் பெர்த் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஷம்ஸி வீடியோ வைரல்
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் தாப்ரைஸ் ஷம்ஸி (Tabraiz Shamsi) பெர்த் அணிக்காக அறிமுகமானார்.
அவர் மிட்சேல் மார்ஷின் (37) விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது அவர் தனது ஷூவை கழற்றி பார்வையாளர்களுக்கு காட்டி தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஷம்ஸி 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |