டால்பின் புயல் தாக்கம்: சீனாவில் 1,300 விமானங்கள் ரத்து
Shanghai Cancels 1300 Flights: டால்பின் புயல் காரணமாக சீனாவில் 1,300 விமானங்கள் ரத்து செய்யபட்டது.
60 சதவீத விமானங்கள் ரத்து
சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் டால்பின் புயல் காரணமாக, ஷாங்காய் நகரின் ஹொங்கியாவோ மற்றும் புதோங் விமான நிலையங்களில் 1,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட விமானங்களில் சுமார் 60 சதவீதம் ஆகும்.

தைவானில் கடும் மழை
புயல் 162 கிமீ வேகத்தில் காற்றுடன் நகர்ந்து, வட தைவானில் கடும் மழையை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் தலைநகர் தைப்பேயில் மழை பெய்ததால், சில தைவான் விமான நிறுவனங்கள் சீனாவுக்கான விமானங்களையும் ரத்து செய்துள்ளன.
சீன வானிலை ஆய்வாளர்கள், ஜெஜியாங் மற்றும் ஃபுஜியான் மாகாணங்களில் 200-400 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளனர். இதனால் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.
ஜெஜியாங் மாகாணத்தின் தைஷோ நகரில் 3,90,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஷாங்காயில் 30,000-க்கும் மேற்பட்டோர் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
மேலும், படகு சேவைகள், கப்பல் சுற்றுலா போன்ற அனைத்து நீர்வழி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள், மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும், தேவையான பொருட்களை சேமித்து கொள்ளவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
டால்பின் புயல் சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காரணமாக, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |