மீண்டும் பாகிஸ்தானின் பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தானில் ஷெபாஸ் ஷெரீப் இன்று 33வது பிரதமராக இன்று பதவி ஏற்க உள்ளார்.
ஷெபாஸ் ஷெரீப்
பல்வேறு கலவர சம்பவங்களுக்கு இடையே பாகிஸ்தானில் கடந்த மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கணிசமான தொகுதிகளை வென்றன.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சி முழு பெரும்பான்மையை பெறத் தவறினாலும், மொத்தம் 75 இடங்களைப் பெற்று வெற்றி கண்டது.
33வது பிரதமர்
இந்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்மூலம் ஷெபாஸ் ஷெரீப் (77) நாட்டின் 33வது பிரதமராக தெரிவானார். அதேபோல் நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |