ஆடு மேய்ப்பவரின் மகன் UPSC தேர்வில் வெற்றி., கிராமமே கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம்
கர்நாடகாவின் பெல்காவி மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் சிறிய கிராமம், சமீபத்தில் ஒரு நம்பமுடியாத சாதனையை கொண்டாடியது.
ஆடு மேய்க்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்தியாவின் மிகவும் கடினமான UPSC சிவில் சேவை தேர்வில் வெற்றி பெற்று தனது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வறுமையைக் வென்ற விடாமுயற்சி
செம்மறி ஆடு வளர்ப்புக்கு புகழ்பெற்ற குருபா சமுதாயத்தைச் சேர்ந்தவர் பீரப்பா சித்தப்பா தோனி (Beerappa Siddappa Doni).
அவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே குடும்பத்துடன் ஆடுகளை மேய்த்துள்ளார். ஆனால் அவரது கனவு மிக உயர்ந்ததாக இருந்துள்ளது.
ஏழ்மையான சூழ்நிலை, கல்விக்கு வாய்ப்புகளின் குறைபாடு போன்ற சவால்கள் அவரை பின்னடைய வைக்கவில்லை.
அரசின் உதவித்தொகைகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவரது சமுதாயத்தின் ஆதரவுடன், படிப்பில் முன்னேறினார். UPSC தேர்வை இலக்காக வைத்துக்கொண்டு கடுமையாக உழைத்தது இன்று சாதனை படைத்துள்ளார்.
Beerappa Siddappa Doni, a youth from the Kuruba community from Amage village in Karanataka, neighbouring Maharashatra cleared UPSC CSE exam with All India Rank 551.
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 23, 2025
It was a joyful even for for this sheep-herding community when they heard this news yesterday. pic.twitter.com/Blb3AzQXyV
சமுதாயத்தின் வெற்றி!
தேர்வில் வெற்றிபெற்று கிராமத்துக்கு திரும்பும் போது, மக்கள் அவரை மாலை அணிவித்து, பறை ஓசையுடன் வரவேற்றனர்.
இந்த வெற்றி தனிப்பட்டது அல்ல, ஒரு சமுதாயத்தின் வெற்றியாக கொண்டாடப்படுகிறது. அவரது சாதனை மற்ற இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. சமூக பின்னணி எதுவாக இருந்தாலும், கனவுகளை நிஜமாக்கி சாதிக்க முடியும் என்பதை உணர்த்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Beerappa Siddappa Doni, UPSC 2025 success story, Shepherd boy cracks UPSC, Belagavi UPSC topper, Kuruba community UPSC, Inspirational UPSC stories, Karnataka UPSC achiever, UPSC from rural India, Civil Services exam topper village, Social mobility UPSC, UPSC with humble background, UPSC வெற்றி 2025