முதல் முறையாக மிஸஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற இந்தியா - யார் இந்த ஷெர்ரி சிங்?
இந்திய பெண் ஒருவர் முதல்முறையாக மிஸஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்றுள்ளார்.
மிஸஸ் யுனிவெர்ஸ் 2025
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒகடாவில், 48 வது மிஸஸ் யுனிவெர்ஸ்(Mrs Universe 2025) போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 120 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிச்சுற்றில், இந்தியாவை சேர்ந்த ஷெர்ரி சிங்(sherry singh) என்பவர் 2025 ஆம் ஆண்டுக்கான மிஸஸ் யுனிவெர்ஸ் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

48 ஆண்டுகளாக மிஸஸ் யுனிவெர்ஸ் போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த ஒருவர் இந்த பட்டம் வென்றுள்ளார்.
ஷெர்ரி சிங்
பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் மனநல விழிப்புணர்வு தொடர்பான பொருளில் அவர் பேசியது அனைவரையும் ஈர்த்துள்ளது.
இந்த போட்டியில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் 2வது இடத்தையும், பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் 3வது இடத்தையும் பிடித்துள்ளார்.
மிஸஸ் யுனிவெர்ஸ் கிரீடம் வென்றது குறித்து பேசிய அவர், "இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல, வரம்புகள் இல்லாமல் கனவு காண துணிந்த அணைத்து பெண்களுக்குமானது. பெண்ணின் அழகு என்பது அவளது கருணை, வலிமை, மீள்தன்மையிலே உள்ளது" என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஷெர்ரி சிங் மிஸஸ் இந்தியா பட்டத்தை வென்றார்.

இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கந்தர் சிங் என்பவருடன் திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |