24 இந்திய மாலுமிகள் உள்ள கப்பல் மீது தாக்குதல் - உடனடியாக காப்பாற்ற கோரிக்கை
ஏவுகணை தாக்குதலால் மூழ்கும் நிலையில் உள்ள கப்பலில் இருக்கும் 24 இந்திய மாலுமிகள் தங்களை மீட்க அவசரகால உதவிச் செய்தி அனுப்பியுள்ளனர்.
இந்திய மாலுமிகள் உள்ள கப்பல் மீது தாக்குதல்
கடந்த சில வாரங்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் இருந்த நிலையில், இன்று இஸ்ரேல் மற்றும் ஈரான் மீண்டும் தாக்குதல்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ஓமன் கடல்பகுதியில் சென்றுகொண்டிருந்த MARIVEX என்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கப்பலில் 24 இந்திய மாலுமிகள் உள்ள நிலையில், தங்களை உடனடியாக காப்பாற்றுமாறு அவசரகால உதவிச் செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தனர்.
தாக்குதலில் கப்பலின் இயந்திர அறையில் ஒரு பெரிய ஓட்டை விழுந்துள்ளதால், விரைவான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைத்தன்மை இழந்தது.
இந்தச் சம்பவத்தின்போது கப்பலின் உயிர் காக்கும் படகுகளும் சேதமடைந்ததால், மீட்புப் பணிகள் மேலும் சிக்கலாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Indian Navy in Harmouz 24 Indian Seafarers seeking urgent assistance at 2057.07N 059 degree 0813 off coast Oman onboard @IndiannavyMedia @MEAIndia @DrSJaishankar @shipmin_india @ITFglobalunion pic.twitter.com/PljHOhTGVv
— FSUI (@FSUIINDIA) June 8, 2026
அவசரகால உதவிச் செய்திகளை அனுப்பியதை இந்திய முன்னோக்கு மாலுமிகள் சங்கம் (FSUI) உறுதிப்படுத்திய நிலையில், மாலுமிகளை காப்பாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |