இரண்டாக பிளந்து கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்! எங்கே.. என்ன நடந்தது? வெளியான பரபரப்பு காட்சி
ஜப்பான் கடலில் பனாமா கொடியிடப்பட்ட சரக்கு கப்பல் இரண்டாக பிளந்து ஒரு பகுதி கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பனாமா கொடியிடப்பட்ட 39,910 டன் எடையுள்ள ‘கிரிம்சன் போலாரிஸ்’ என்ற சரக்கு கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் குறித்து ஜப்பான் கடலோர காவல்படை அளித்த தகவலின் படி, ‘கிரிம்சன் போலாரிஸ்’ என்ற கப்பல் புதன்கிழமை காலை Hachinoheதுறைமுகத்தில் தரைதட்டி நின்றது.
பின் மீண்டும் மிதக்கத் தொடங்கியது. ஆனால் மோசமான வானிலை காரணமாக வெகுதூரம் செல்ல முடியவில்லை மற்றும் துறைமுகத்திலிருந்து சுமார் 4 கிமீ தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.
வியாழக்கிழமை அதிகாலை கப்பல் இரண்டாகப் பிளந்து எண்ணெய் கடலில் கசிந்தது. கடலில் சுமார் 5.1 கிமீ நீளம் மற்றும் சுமார் 1 கிமீ அகலத்திற்கு எண்ணெய் படலம் காணப்பட்டது.
எனினும், எண்ணெய் கரையை அடையாத அளவிற்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
Au Japon, un navire qui s'est échoué et brisé en deux provoque une fuite de pétrole pic.twitter.com/3D98OxoPYt
— BFMTV (@BFMTV) August 13, 2021
கப்பலில் இருந்த 21 குழுவினரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உடைந்த கப்பலின் பின் பாகம் கடலில் மூழ்கியது. குறித்து பரபரப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.