பேரழிவு ஏற்படும் அச்சம்! இலங்கை கடலில் மூழ்கும் ரசாயனம் நிறைந்த சரக்குக் கப்பல்
ரசாயனம் நிறைந்த சரக்குக் கப்பல் இலங்கை கடற்கரையில் மூழ்கி வருவதால் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட X-Press Pearl என்ற சரக்கு கப்பல் இலங்கை கடலில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தீப்பிடித்து வருகிறது.
கப்பல் கடலில் மூழ்கினால் சில நூறு டன் எஞ்சின் எண்ணெய் கடலில் கசியக்கூடும், இதனால் கடல் சார் வாழ்க்கையில் பேரழிவு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் கடந்த சில நாட்களில் கூட்டாக இணைந்து தீயை அணைக்கும் மற்றும் கப்பல் உடைந்து மூழ்குவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
ஆனால் கடல் கொந்தளிப்பு மற்றும் பருவமழை காரணமாக இந்த நடவடிக்கைக்கு இடையூறு ஏற்பட்டது.
இந்நிலையில், கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது. கடல் மாசுபாட்டைக் குறைக்க கப்பல் மூழ்குவதற்கு முன் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் கப்பலின் பின்புற பகுதி உடைந்து விட்டது என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் இந்திகா சில்வா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில நாட்களாக Negombo நகர கரையோரப் பகுதியில் எண்ணெய் மற்றும் ரசாயனங்களால் மாசடைந்துள்ளது.
கப்பல் மூழ்கி வருவதால், Negombo Lagoon-ல் இருந்து கப்பல்கள் நுழைவதற்கும், Panadura-விலிருந்து Negombo-வுக்கு மீன்பிடிக்க செல்வதற்கும் மீன்வளத்துறை அமைச்சர் இடைக்கால தடை விதித்துள்ளார்.
Situation Update: Latest videos of the "X-PRESS PEARL" vessel. Footage was captured by the SLAF Bell 212 a short while ago (02 June 2021).#MVXPressPearl pic.twitter.com/4GznxCTuXy
— Sri Lanka Air Force (@airforcelk) June 2, 2021
எண்ணெய் மற்றும் ரசாயன கசிவால் lagoon மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.