சூயஸ் கால்வாயில் இன்ஜின் கோளாறாகி பழுதாகி நின்ற சரக்குக் கப்பல்
எகிப்தின் சூயஸ் கால்வாயில் வெள்ளிக்கிழமை சரக்குக் கப்பல் ஒன்று பழுதாகி நின்றது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மார்ச் மாதம் சூயஸ் கால்வாய் குறுக்கே எவர் கிவ்வன் கப்பல் சிக்கிக் கொண்டது. இதனால் கால்வாயில் கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கால்வாயின் இருபுறங்களிலும் கப்பல்கள் குவிந்தன.
இதன்காரணமாக 6 நாட்களாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் உலகளாவிய வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சூயஸ் கால்வாயில் தெற்கு நோக்கி பயணித்த Maersk Emerald சரக்குக் கப்பல் திடீரென இன்ஜின் கோளாறாகி நின்றது.
ஆனால், உடனடியாக இழுவை கப்பல்கள் மூலம் கப்பல்கள் காத்திருக்கும் பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்டு, கோளாறு சரிபார்க்கும் பணி நடந்ததாக சூயஸ் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் போது, 2015ல் முடிக்கப்பட்ட கால்வாயின் ஒரு பகுதியின் விரிவாக்கத்தின் போது உருவாக்கப்பட்ட இரண்டாவது பாதை வழியாக சில கப்பல்கள் திருப்பி விடப்பட்டன என அதிகாரிகள் கூறினார்.
Maersk Emerald மிதக்கவைக்கப்பட்ட பின்னர் கால்வாயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது என்று
கப்பல் நிறுவனமான Leth ஏஜென்சி தெரிவித்துள்ளது.