நட்பு நாடுகளுக்கு அனுப்பப்படும் உணவு தானியங்கள்: ரஷ்யாவின் அத்துமீறல்!
உக்ரைனில் இருந்து கைப்பற்றப்பட்ட ஏழாயிரம் டன் உணவுத் தானியங்கள் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பெர்டியன்ஸ்க் நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக அப்பகுதியின் கூட்டுப்பணியாளர் Yevhen Balytskyi தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கையில், உக்ரைனின் பல டன் உணவுத் தானியங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் உக்ரைனிய தலைநகரங்களில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டி இருந்த உணவுத் தானியங்களையும் உக்ரைனிய படைகள் முழுவதுமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.
The first merchant ship with seven thousand tons of grain has left #Russian-occupied #Berdyansk. This was stated by collaborator Yevhen Balytskyi.
— NEXTA (@nexta_tv) June 30, 2022
According to propagandists, the grain will be shipped to "friendly countries". pic.twitter.com/eGaHlgUDCS
இந்த குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி புடின் முழுவதுமாக நிராகரித்துள்ள போதிலும், உணவு தானியங்களை ரஷ்யா சிறைப்பிடித்து வைத்து இருப்பதாகவே பெரும்பாலான உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனிய நகரமான பெர்டியன்ஸ்க்-கில் (Berdyansk) இருந்து ஏழாயிரம் டன் உணவுத் தானியங்களை ரஷ்ய தங்களது முதல் வணிக கப்பலின் உதவியுடன் வெளியேற்றி இருப்பதாக அந்த பகுதியின் கூட்டுப்பணியாளர் Yevhen Balytskyi தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு நெருக்கடி: உதவிகரம் நீட்டும் கனடா!
உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த தானியங்கள் ரஷ்யாவின் நட்பு நாடுகளுக்கு அனுப்பபட இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.