உக்ரைன் துறைமுகத்தில் தயார் நிலையில் மூன்று கப்பல்கள்... துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
தானிய எற்றுமதியை நம்பியிருந்த உக்ரைனுக்கு பேருதவியாக துருக்கியும் ஐக்கியன் நாடுகள் மன்றமும் களமிறங்கியது
மூன்று கப்பல்கள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 கப்பல்கள் தானியங்களை நிரப்பும் பணி நிறைவு
துருக்கி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் கீழ் மேலும் மூன்று கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியதாக துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி 185 நாட்களாகியுள்ளது. பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவை இரு நாடுகளும் எதிர்கொண்டு வருகிறது.
@reuters
தானிய எற்றுமதியை மட்டுமே நம்பியிருந்த உக்ரைனுக்கு பேருதவியாக துருக்கியும் ஐக்கியன் நாடுகள் மன்றமும் களமிறங்கிய நிலையில், இதுவரை 1 மில்லியன் டன் தானியங்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தானிய ஏற்றுமதியை தொடங்க ஒப்பந்தம்
இதனிடையே, துருக்கி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் கீழ் மூன்று கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று கப்பல்கள் தானியங்களை நிரப்பும் பணி முடிவடைந்து தயார் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், துருக்கி, ஐக்கிய நாடுகள் மன்றம், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இஸ்தான்புல்லில் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக ஏற்றுமதியை நிறுத்தப்பட்ட மூன்று உக்ரேனிய கருங்கடல் துறைமுகங்களிலிருந்து தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதனையடுத்தே, உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானியங்கள் வெளியேறத் தொடங்கியுள்ளன. இதனிடையே, உக்ரைன் மீதான படையெடுப்பு முன்னெடுக்கப்பட்டு 185 நாட்களை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் போக்கு ஐரோப்பிய கண்டத்திற்கே ஆபத்தாக முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
@getty
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை தெரிவிக்கையில், Zaporizhzhia அணுமின் நிலையத்தின் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உள்ளது, அதன் ஆறு உலைகளில் இரண்டு ஷெல் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய அமைப்புடன் மீண்டும் இணைக்கப்பட்டதன் பின்னர் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் வெளியேற கட்டாயப்படுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு உக்ரேனிய ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.