சிவன் கோவிலுக்காக வெடித்த போரா? தாய்லாந்து கம்போடியா மோதலின் பின்னணி என்ன?
தாய்லாந்து கம்போடியா மோதலின் பின்னணியில், சிவன் கோவில் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.
தாய்லாந்து - கம்போடியா மோதல்
தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளும் பௌத்த மத பின்னணியை கொண்ட நாடுகளாகும்.
இரு நாடுகளும் 800 கிலோமீட்டர் தொலைவுக்கு, எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.
கடந்த ஜூலை 24 ஆம் திகதி, அதிகாலையில் இரு நாடுகளும் எல்லையில் மோதிக்கொள்ள தொடங்கின. போர் விமானங்கள், பீரங்கிகள், டாங்கிகளை கொண்டு, இரு நாடுகளும் 3வது நாளாக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இரு நாடுகளுக்கிடையேயான மோதலில், இதுவரை 32 பேர் உயிரிழந்ததாகவும், 28 ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் காயமடைந்தாகவும் தகவல் வெளியாகியது.
எல்லையை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில், தாய்லாந்து ராணுவ சட்டத்தை அமுல்படுத்தி உள்ளது. மோதல் காரணமாக தாய்லாந்தில் உள்ள 7 மாகாணங்களுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என தாய்லாந்தில் உள்ள இந்திய துாதரகம் அறிவுறுத்தியுள்ளது.
In view of the situation near Thailand-Cambodia border, all Indian travelers to Thailand are advised to check updates from Thai official sources, including TAT Newsroom.
— India in Thailand (@IndiainThailand) July 25, 2025
As per Tourism Authority of Thailand places mentioned in the following link are not recommended for… https://t.co/ToeHLSQUYi
சிவன் கோவில்
இரு நாடுகளும் எல்லை பிரச்சனை காரணமாக அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், எல்லையில் உள்ள சிவன் கோவிலே காரணம் பிரச்சினைக்கு காரணம் என கூறப்படுகிறது.
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் டாங்க்ரெக் மலைத்தொடரில் பிரியா விகார் என்ற சிவன் கோயில் உள்ளது. இது இரண்டாம் சூரிய வர்மனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கோவிலில் இருந்து சில மைல் தூரத்தில் உள்ள பிரசாத் தா முயென் தாம் என்ற 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலும் உள்ளது. இரு கோவில்களுக்கும் முக்கிய தலமாக கருதப்படுகிறது.
இரு நாடுகளுமே, பிரியா விகார் கோயில் தங்களுக்கு தான் சொந்தம் என கூறி வருகிறது. இந்த விவகாரம் எல்லை பிரச்சினையாக வெடித்த நிலையில், கோவில் கம்போடியாவிற்கே சொந்தம் என 1962 ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த கோவிலை யுனெஸ்கோ சர்வதேச பாரம்பரிய தளமாக அறிவித்த பின்னர், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 201 ஆம் ஆண்டும் கோவில் கம்போடியாவிற்கே சொந்தம் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. இருந்தாலும் எல்லை பிரச்சினை தீரவில்லை.
உள்நாட்டு அரசியல் பிரச்சினை
இரு நாடுகளும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமெரிக்காவின் 36% வரிவிதிப்பை எதிர்கொள்ள உள்ள நிலையில், பொருளாதர பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சியாகவும் இந்த மோதல் நீட்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எல்லை பிரச்சினையில் தாய்லாந்து அரசு சரியாக செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தாய்லாந்து முன்னாள் பிரதமர் பேதோங்தான் சினவத்ரா, கம்போடியா பிரதமருடன் பேசிய ஆடியோ வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த உரையாடலில் அவர் கம்போடியா நாட்டின் முன்னாள் பிரதமரான ஹுன் சென்னை(Hun Sen) மாமா என அழைத்ததும், தாய்லாந்து இராணுவத் தளபதியை எதிரி என விமர்சித்ததும் பெரும் போராட்டமாக வெடித்தது.
இதனை தொடர்ந்து அவர் பதிவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது இடைக்கால பிரதமராக Phumtham Wechayachai செயல்படுகிறார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா சீன உள்ளிட்ட நாடுகள் முன்வந்த நிலையில், 3 வது நாடுகளின் மத்தியஸ்தை ஏற்க முடியாது என தாய்லாந்து நிராகரித்துள்ளது.
அதே போல் 40 ஆண்டுகளாக கம்போடிய பிரதமராக இருந்த ஹுன் சென், பதவி விலகி தனது மகன் ஹுன் மானெட்டை (Hun Manet) பிரதமராக நியமித்தார்.
தந்தையின் நிழலிலிருந்து ஆட்சி செய்யும் ஆளுமையற்ற பிரதமர் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எல்லைப் பிரச்சினை, நாட்டுப்பற்று ஆகியனவற்றை தூக்கிப் பிடிப்பதன் மூலம் மகனின் செல்வாக்கை உயர்த்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |