பிரான்சில் ஒரு மாதம் கழித்து வீட்டிற்கு திரும்பிய கணவன்-மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! நடந்த வினோத சம்பவம்
பிரான்சில் பூட்டிய வீடு ஒன்றை கடத்தல்காரர்கள், தங்களது சேமிப்பு கிடங்காக பயன்படுத்தியுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
பிரான்சின் மார்செயின் 10-ஆம் வட்டாரத்தில் இருக்கும் வீடு ஒன்றில் 56 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், அவருடைய கணவரும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுமார் ஒரு மாதகாலமாக அந்த வீட்டில் வசிக்காமல் வெளியில் சென்றிருந்த அவர்கள், சமீபத்தில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது அந்த பெண்ணின் கணவர், வீட்டின் பூட்டு மாற்றப்பட்டுள்ளதைக் கண்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பூட்டை திறக்க முடியாத காரணத்தினால், அவர் ஜன்னல் வழியாக ஏறி உள்ளே சென்று பார்த்த போது, கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஏனெனில், வீட்டிற்குள்ளே 5 கிலோ எடைகொண்ட கொக்கைன் போதைப்பொருளும். 10,000 யூரோக்கள் ரொக்கப்பணமும் இருந்துள்ளது.
இதையடுத்து இது குறித்து அந்த தம்பதி உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், விரைந்து வந்த பொலிசார் சோதனை மேற்கொண்ட போது, அவர்கள் இல்லாத கடந்த ஒரு மாத காலத்தில் போதைப் பொருள் கடத்தல் குழு, அவர்கள் வீட்டை ஒரு கிடங்கு போல் பயன்படுத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கும்பல் யார்? என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.