அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போட்ட பிறகு உயிரிழந்த நோயாளிக்கு ஏற்பட்ட அசாதாரண அறிகுறிகள் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்
அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போட்ட பிறகு உயிரிழந்த 60 வயதுடைய பெண்ணிற்கு ஏற்பட்ட அறிகுறிகள் குறித்து டென்மார்க் மருந்துகள் நிறுவனம் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
டென்மார்க்கில் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போட்ட பிறகு இரத்த உறைதல் பாதிப்பால் 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போடப்பட்ட பிறகு பக்க விளைவாக இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து டென்மார்க், நார்வே, பல்கேரியா, ஐஸ்லாந்து மற்றும் தாய்லா்நது ஆகியோ நாடுகள் அந்நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்துவதை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில், டென்மார்க்கில் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போட்ட பிறகு இரத்தம் உறைதலால் உயிரிழந்த பெண்ணிற்கு, மிகவும் மிகவும் அசாதாரண அறிகுறிகள் இருந்ததாக டென்மார்க் மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த பெண்ணுக்கு சிறிய மற்றும் பெரிய குழாய்களில் குறைந்த எண்ணிக்கையிலான இரத்த பிளேட்லெட்டுகள் மற்றும் உறைதல் இருந்ததாகவும், அத்துடன் இரத்தப்போக்கு இருந்ததாகவும் கூறியுள்ளது.
ஆனால், இரத்த உறைதலுக்கும் அஸ்டிராஜெனேகா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.