இந்தோனேசியா தேசிய பொலிஸ் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்.. கதிகலங்க வைத்த நபர்! சுட்டுக் கொல்லப்பட்ட பரபரப்பு வீடியோ
இந்தோனேசியா தேசிய பொலிஸ் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜகார்த்தாவில் உள்ள தேசிய பொலிஸ் தலைமையகத்திலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் என கூறப்படும் இச்சம்பவத்தில் தாக்குதல்தாரி ஒருவர் கொல்லப்பட்டதாக இந்தோனேசியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிசிடிவி காட்சியில், பர்தா அணிந்து படி கையில் துப்பாக்கியுடன் தேசிய பொலிஸ் தலைமையக வாயிலுக்குள் நுழைந்த தனிநபர், கண்ணில் பட்ட அதிகாரிகளை நோக்கி சரமாரியாக சுடுகிறார்.
பொலிசார் நடத்திய எதிர்தாக்குதலில், தோட்டா பாய்ந்து சாலையிலே சரிந்த மர்ம நபர், சிறிது நேரத்தில் அசைவற்று கிடக்கிறார். தாக்குதலில் ஈடுப்பட்டது பெண் என கூறப்படுகிறது, எனினும் பொலிஸ் தரப்பில் இருந்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
How does she get through the metal detectors at the installation entrances? https://t.co/gWN58pwTk4 pic.twitter.com/v4HyPSdIYG
— uradn (@uradn) March 31, 2021
Indonesian media are reporting a shout-out at National Police Headquarters in Jakarta pic.twitter.com/7hPDBqFNgL
— Yenni Kwok (@yennikwok) March 31, 2021
3 நாட்களுக்கு முன் Makassar தேவாலய நுழைவுவாயிலில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது ஜகார்த்தாவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்தோனேசியா மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக திருமணமான தம்பதிகள் Makassar தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இருவரும் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் என இந்தோனேசியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் மேலும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.