காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு... நீடிக்கும் பதட்டம்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயிலில் இந்த துப்பாக்கசிச் சூடு நடந்ததாக Al Jazeera தெரிவித்துள்ளது.
காபூல் விமான நிலையத்தில் கூடியிருப்பவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ‘மிகவும் நம்பகமான’ உளவுத்துறை தகவல் கிடைதத்துள்ளது என்று நேற்று பிரித்தானியா ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹெப்பி எச்சரிக்கை விடுத்தார்.
ஜேம்ஸ் ஹெப்பி எச்சரித்த சில மணிநேரங்களில்காபூல் விமான நிலையத்தில் பயங்கர தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 95 பேர் கொல்லப்பட்டதாகவும், கிட்டதட்ட 150 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, காபூல் விமான நிலையம் தீவிரவாதிகள் கண்காணிப்பில் இருப்பதாகவும், பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வலுவான வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உளவுத்துறை அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயிலில் இந்த துப்பாக்கசிச் சூடு நடந்ததாக Al Jazeera தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா, யார் நடத்தினார்கள் போன்ற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.